அதிபர் ஜோ பைடனுக்கு 78 ஆவது பிறந்தநாள்!

joe biden

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் இன்று தனது 78 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

அமெரிக்காவின் மிக வயதான அதிபர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ள பைடன் 1942 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி பென்சில்வேனியாவிலுள்ள ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார்.

50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்டவர். 1972ஆம் ஆண்டு முதன்முறையாக செனட் உறுப்பினராக டெல்அவேர் பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதுநாள் வரை 6 முறை இதே பகுதியில் இருந்து செனட் உறுப்பினராகியுள்ளார். அமெரிக்கா அதிபராக வேண்டும் என்ற ஜோ பைடனின் கனவு பல ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது.

ஜோ பைடன்

1988ஆம் ஆண்டு ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்து களத்தில் இறங்கி பின்னர் அதிலிருந்து விலகினார்.

மீண்டும் 2008ஆம் ஆண்டு ஜனநாயக கட்சி சார்பில் போட்டி களத்தில் இறங்கிய ஜோ பைடன் ஒபாமாவுக்காக வாய்ப்பை விட்டு கொடுத்து துணை அதிபர் வேட்பாளரானார்.

அதிபர் ஒபாமாவின் ஆட்சியில் துணை அதிபராக பதவி வகித்த போது , ஒபாமா கேர் மருத்துவ காப்பீடு திட்டம், தொழிற்சாலை சீர்திருத்த நடவடிக்கைகள் உள்ளிட்டவைகளில் முக்கிய பங்காற்றியவர்.

1987 மற்றும் 2008 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட முயன்ற பைடனுக்கு அப்போது அதிபராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு அதிபர் பதவியைத் தன்வசமாக்கியுள்ளார் பைடன்.

அமெரிக்கா இதுவரை பெற்ற துணை அதிபர்களிலே சிறந்தவர் ஜோ பைடன் என ஒபாமா பலமுறை இவரை புகழ்ந்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு இழப்புகளை சந்தித்தவர் ஜோ பைடன். 1972இல் முதன்முறையாக செனட் உறுப்பினராக தேர்வான உடனே சாலை விபத்தில் மனைவியை இழந்தார்.

தனது குழந்தைகள் சிகிச்சை பெறும் அறையில் இருந்து தான் செனட் உறுப்பினராக பதவி ஏற்றார். 1977-ல் ஜில் ட்ரேஸி என்ற ஆசிரியரை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார் பைடன்.

இவர்கள் இருவருக்கும் பிறந்த பெண் குழந்தையின் பெயர் ஆஷ்லே. 2005ஆம் ஆண்டில் மூளை புற்றுநோய்க்கு தனது மகனை இழந்தார்.

தன்பாலின சேர்க்கை திருமணங்களுக்கு வெளிப்படையாக தனது ஆதரவினை தெரிவித்தவர். பைடனுக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை பிரியமாம்.

இத்தனை தடைகளையும் சோகத்தையும் தோல்வியையும் சுமந்து அதிபராகியுள்ள பைடனை நாமும் வாழ்த்தலாமே!

இதையும் படிக்கலாமே: ஜோ பைடனை பாதுகாக்கும் “ஜில்லு”… யார் இந்த ஜில் பைடன்?

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter