“தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்தால் வேலை போய்விடும்”

nurse

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று அமெரிக்கா.

இதனிடையே அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி அதிதீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது.

அமெரிக்காவில் மாடர்னா, பைசர் மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகள் போடப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் ஹூஸ்டன் என்ற மருத்துவமனை குழுமத்தில் பணி புரியும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்ததால் 178 பேரை மருத்துவமனை நிர்வாகம் இடைநீக்கம் செய்தது.

அவர்களில் 117 பேர் அதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தனர். வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான செவிலியர் ஜெனிபர் ஃபிரிட்ஜ் தடுப்பூசிகள் ஆபத்தானவை, அவற்றை நம் மீது பரிசோதித்துப் பார்ப்பதற்காக பயன்படுத்துகிறார்கள் என்று கூறியிருந்தார்.

இவற்றை கேட்ட நீதிபதி, தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பம் இல்லையென்றால் போட்டுக்கொள்ளவேண்டாம், ஆனால், அவர்களுக்கு மருத்துவமனையில் வேலை கிடையாது. வேறு எங்காவது வேலைக்கு போகலாம் என தெரிவித்தார்.