மாடர்னாவின் 2வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்!

kamala harris

மாடர்னா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசை
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், போட்டுக்கொண்டார்.

உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்துவரும் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. சுமார் 2.6 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக்கட்டுப்படுத்த அங்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அமெரிக்காவின் மாடர்னா மற்றும் பைசர் ஆகிய இரு நிறுவனங்களின் கொரோனா தடுப்பு மருந்து அமெரிக்காவில் பயன்பாட்டு வந்தது. இதனிடையே அமெரிக்க அதிபரான ஜோ பைடன், தான் பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில் 10 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என உறுதியளித்துள்ளார். அதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தலைவர்கள் முதலில் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். பைடன் பைசர் நிறுவனத்தின் இரு டோஸ் தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டார்.

Kamala Harris

துணை அதிபரான கமலா ஹாரிஸ், கடந்த மாதம் 29 ஆம் தேதி வாஷிங்டனில் உள்ள யுனிடெட் மெடிக்கல் சென்டரில், மாடர்னா மருந்தின் முதல் டோசை போட்டுக் கொண்டார். கமலாவின் கணவரும் மாடர்னா தடுப்பூசியை போட்டுக்கொண்டார். இந்நிகழ்வு டிவியில் நேரலையாக ஒளிபரப்பானது. இந்நிலையில், கமலா ஹாரிஸ் நேற்று தனது இரண்டாம் டோஸ் கொரொனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

தடுப்பூசி உயிரை காக்கும் என்றும், அனைவரும் தவறாமல் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கமலா ஹாரிஸ் அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கலிபோர்னியா மாகாணம் மற்றும் ரோடே தீவில் புதிய கொரோனா தொற்றுகள் அதிகரித்துள்ளன. எனவே கொரோனா பரவலை தடுக்க மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு அதிபர் ஜோ பைடன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.