கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் கமலா ஹாரிஸ்!

Kamala Harris

அமெரிக்க துணை அதிபராக பதவியேற்கவுள்ள கமலா ஹாரிஸ், மாடர்னா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

வாஷிங்டனில் உள்ள மருத்துவ மையத்தில் அவருக்கு தடுப்பூசி போடும்போது அமெரிக்க தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அமெரிக்காவில் 5 கோடி பேருக்கு ஊசி போடப்பட உள்ள நிலையில் இதுவரை சுமார் 10 லட்சம் பேருக்கு ஃபைசர் நிறுவனத்தின் முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் 14ஆம் தேதி முதல் அமெரிக்காவில் ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்து பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது.

அண்மையில் மாடர்னா தடுப்பூசியையும் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த ஊசி முதன்முதலாக செவிலி ஒருவருக்கு போடப்பட்டது.

kamala-harris-receives-coronavirus-vaccine-live-on-television

இந்நிலையில் தற்போது இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ்க்கு போடப்பட்டது. அமெரிக்க மக்களுக்கு தடுப்பூசி மீதான நம்பிக்கையை ஏற்படுத்தவே போட்டுக்கொள்வதாக கமலாஹாரிஸ் தெரிவித்தார்.

முன்னதாக மைக் பென்ஸ், அவரது மனைவி மற்றும் அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன் ஆகியோர் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடபட்டது.

இதனிடையே அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இதுகுறித்து கமலா ஹாரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று எனக்கு COVID-19 தடுப்பூசி கிடைத்தது. இந்த தருணத்தை சாத்தியமாக்கிய எங்கள் முன்னணி சுகாதார ஊழியர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு நான் நம்பமுடியாத அளவிற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நீங்கள் தடுப்பூசி எடுக்க முடிந்தால், அதைப் பெறுங்கள். இது உயிர்களைக் காப்பாற்றுக்கூடியது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வார இறுதிக்குள் ஃபைசர் நிறுவனத்திடம் இருந்து 2.9 மில்லியன் தடுப்பூசிகளைப் பெற இலக்கு கொண்டுள்ளது. ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை தொடர்ந்து மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசிக்கும் ஒப்புதல் கிடைத்துள்ளது.

இதனிடையே அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கலிபோர்னியா மாகாணம் மற்றும் ரோடே தீவில் புதிய கொரோனா தொற்றுகள் அதிகரித்துள்ளன. எனவே கொரோனா பரவலை தடுக்க மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: மாடர்னா நிறுவனத்தின் கோவிட் தடுப்பூசி 94% பலன்.!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter