கமலா ஹாரிஸ் அடுத்த 4 ஆண்டுகள் இங்கேதான் தங்கப்போகிறார்!

kamala harris

அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் வெள்ளை மாளிகை.. அப்படி எனில் துணை அதிபர் எங்கே தங்குவார்? அவரது அதிகாரப்பூர்வ இல்லம் எது ? தெரிந்து கொள்ளலாம்.

நாம் திரையில் காணும் இந்த 19ஆம் நூற்றாண்டு கால மாளிகை தான் அமெரிக்கா துணை அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம்.

வெள்ளைமாளிகையின் வடக்கே இரண்டரை மைல் தொலைவில் அமைந்திருக்கிறது. இதற்கு பெயர் NUMBER ONE OBSERVATORY CIRCLE.

1893இல் கடற்படை ஆய்வக கண்காணிப்பாளருக்காக இந்த கட்டடம் கட்டப்பட்டது.

1924ஆம் ஆண்டு முதல் கடற்படை தளபதியின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாறியது.

பொதுவாக துணை அதிபர்கள் அவரவர் சொந்த இல்லங்களில் தான் தங்குவர்.

ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான செலவுகள் அதிகரித்ததால் ,அதிபருக்கு வெள்ளை மாளிகை இருப்பதை போல, துணை அதிபருக்கும் அதிகாரப்பூர்வ இல்லம் தேவை என முடிவெடுக்கப்பட்டது.

எனவே 1974ஆம் ஆண்டு அமெரிக்கா நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டு NUMBER ONE OBSERVATORY CIRCLE துணை அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றப்பட்டது.

1977ஆம் ஆண்டு முதன்முறையாக துணை அதிபர் WALTER MONDALE குடும்பத்துடன் இங்கே தங்கினார்.

அன்று முதல் துணை அதிபர்கள் அனைவரும் இங்கேயே தங்கி வருகின்றனர்.

ஜோ பைடன் துணை அதிபராக இருந்த 2008 முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இங்கே தான் வாழ்ந்தார்.

9 ஆயிரத்து 150 சதுர அடி பரப்பில் அமைந்திருக்கும் இந்த மூன்றடுக்கு கட்டடத்தின் தரை தளத்தில் சமையல் அறை, சலவை அறை மற்றும் பொருட்கள் வைக்கும் அறைகள் உள்ளன.

முதல் தளத்தில் வரவேற்பு அறை, உணவருந்தும் அறை, விருந்தினர்களை உபசரிக்கும் அறை ஆகியவை உள்ளன.

kamala harris

இரண்டாம் மற்றும் மூன்றாம் தளங்களில் படுக்கை அறைகள் உள்ளன.

ஒவ்வொரு துணை அதிபர் இங்கே குடியேறும் போதும் அவரவர் தேவைக்கு ஏற்ப சில மாற்றங்களை கொண்டு வருகின்றனர்.

அப்படி காலபோக்கில் நீச்சல் குளம் , உடற்பயிற்சி அறை , தோட்டங்கள் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு கருதி பொதுமக்கள் இங்கே பார்வையிட அனுமதிக்கப்படுவதில்லை.

பல்வேறு நாட்டு தலைவர்களும் அதிகாரிகளும் இங்கே வந்து தங்கியுள்ளனர்.

துணை அதிபரின் வீட்டை அழகூட்டுவதற்காகவே, VICE PRESIDENT RESIDENT FOUNDATION என்ற அமைப்பு 1991ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு அதன் மூலம் நிதி திரட்டப்படுகிறது.

அமெரிக்கா துணை அதிபராக தேர்வாகி இருக்கும் கமலா ஹாரிஸும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இங்கே தான் வசிக்க போகிறார்.

இதையும் படிக்கலாமே: கமலா ஹாரிஸ் அடுத்த 4 ஆண்டுகள் இங்கேதான் தங்கப்போகிறார்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter