நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கட்டும்! ஹோலி பண்டிகைக்கு கமலா ஹாரிஸ் வாழ்த்து

kamala harris

இந்தியா முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டுவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத பெளர்ணமி தினத்தன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படும். ஹோலி பண்டிகைக்கு அரங்கு பஞ்சமி என்ற மற்றொரு பெயரும் உண்டு.

இந்தியாவின் டெல்லி, உத்திர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் வண்ணங்களின் பண்டிகையான ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படும்.

Happy Holi 2021 Images Quotes in English & Hindi. Holi Images & Wishes to  Send on WhatsApp, Facebook, Instagram WhatsApp.

மக்கள் ஓர் இடத்தில் ஒன்று கூடி, வெள்ளை நிற உடை அணிந்து ஒருவர் மீது ஒருவ்ர் வண்ணா பொடிகளை தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.

இந்நிலையில் அமெரிக்காவின் துணை அதிபரான கமலா ஹாரிஸ் இந்திய மக்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமலா ஹாரிஸ், “நண்பர்கள் மற்றும் அன்பானவர்களுக்கு இனிய ஹோலிபண்டிகை வாழ்த்துக்கள், மகிழ்ச்சி நிறைந்த இந்த பண்டிகையானது நம்முள் இருக்கும் வேறுபாடுகளை களைத்து, நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கட்டும்.

இந்த நெருக்கடியான காலக்கட்டத்திலும் ஹோலி பண்டிகையை ஒற்றுமையாகவும் இனிமையாகவும் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவோம்.

வேறுபாடுகளை கலைந்து கொண்டாடப்படும் பண்டிகை இது” எனக் குறிப்பிட்டுள்ளார்.