கருப்பின இளைஞர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு!

shooting

அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தில் கருப்பின இளைஞர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதை அடுத்து பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மே 25 ஆம் தேதி அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் ஃபிளாய்ட் காவலர்களால் கொல்லப்பட்டதை கண்டித்து அங்கு போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது காவலர்கள் கருப்பினத்தவர்களிடம் கொடூரமாக நடந்துகொள்வதாகவும், இனவெறி மற்றும் மதவெறியை வெளிகாட்டுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவில் கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடைபெற்ற பிளாக் லைவ் மேட்டர்ஸ் போராட்டத்தால் அமெரிக்காவே ஸ்தம்பித்தது. ஜார்ஜ் பிளாயிட்  காவலர்களால் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கறுப்பினத்தவரின் வாழ்க்கை மற்றும் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பிளாக் லைவ்ஸ் மேட்டர்ஸ் (BLACK LIVES MATTERS) வாசகம் வலுப்பெற்றது.

shooting

இந்நிலையில் வின்கான்ஸின் மாகாணத்தில் உள்ள கெனோஷா நகரில் ஜேகப் பிளேக் என்ற கருப்பின இளைஞரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இத்தகவல் அறிந்ததும்பொதுமக்கள் அங்கு திரண்டு காவல்துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஜேகப் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் பரவியதும், கெனோஷா நகரில் போராட்டம் வெடித்தது. மக்கள் சாலையில் இறங்கி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, கூட்டத்தை கலைத்தனர். பலர் கைது செய்யப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்தப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பதற்றம் ஏற்படவே அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த வாரத்தின் சின்சினாட்டி நகரை சுற்றி பல இடங்களில் ஒரே இரவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்கலில் ஒருவர் கருப்பின இளைஞராவர்.