அமெரிக்காவில் வசிக்கும் தெற்காசிய பெண்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும்: கமலா ஹாரிஸ்

kamala harris

அமெரிக்காவில் வசிக்கும் தெற்காசிய பெண்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் குடியரசுக் கட்சியும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியும் 13 லட்சம் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகளை கவர தீவிர முயற்சி செய்து வருகின்றன. பிரதமர் மோடியை அழைத்து இந்தியர்களின் வாக்குகளுக்கு ட்ரம்ப் காய் நகர்த்திய நிலையில், ஜனநாயக கட்சி ஒரு படி மேலே போய் இந்தியாவை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிசை துணை அதிபர் வேட்பாளராக களமிறக்கி அதிரடி காட்டியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 29 ஆம் தேதி நடந்த தெற்காசிய பெண்கள் ஆளுமைத் திறன் கருத்தரங்கில், இந்திய வம்சாவளியும் துணை அதிபர் வேட்பாளருமாகிய கமலா ஹாரிஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது பேசிய அவர், என் அம்மா, தனது 19 வயதில் புற்றுநோய்க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அமெரிக்காவுக்கு படிக்க வந்தார். மருந்து கண்டுபிடிப்பதற்காக கடுமையாக போராடினார். அதே உறுதியுடனேயே தற்போது ஜோ பிடன் போராடி வருகிறார். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் அமெரிக்க மண்ணின் வலிமை. ஆசிய அமெரிக்க பெண்கள் மிகவும் திறமைசாலிகள், தைரிய சாலிகள். இதனை அமெரிக்காவில் வசிக்கும் பெருந்தலைகளுக்கு காட்ட தேர்தலில் இறங்கி அதிகாரத்தை பிடிக்க வேண்டும். ஆளுமை நம் பிறக்கும்போதே உடன் பிறந்துவிடும். எனவே, தலைமை பதவிக்கு, வயது ஒரு தடையல்ல” எனக் கூறினார்.

இதையும் படிக்கலாமே: அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனையை எட்டிவிட்டது- ட்ரம்ப்

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa