பெற்றோரின் திருமண ஆல்பத்தை பார்த்து கதறி அழுத சிறுமி!- வைரல் வீடியோ

Little girl

அமெரிக்காவில் பெற்றோரின் திருமண ஆல்பத்தை பார்த்த சிறுமி ஒருவர் கதறி அழுத சம்பவம் விநோதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்பா என்றால் பிடிக்காத மகள்களே இல்லை என்று சொல்லலாம். மொழி, இனம், மதம், நாடு மாறினாலும் அப்பா- மகள் பாசத்திற்கு தனி அடையாளமே உண்டு.. சண்டை போடுவதற்கும் பாசம் வைப்பதற்கும் ஓர் உதாரணம் அப்பா- மகள் உறவு. பல பெண்கள் தங்களது தந்தையையே சூப்பர் ஹீரோவாக நினைப்பது உண்டு. அப்படி அப்பா மீது அதீத அன்பு மகளுக்கு நேரும் ஏமாற்றம், பாசத்தை பங்கு கொள்ள முடியாத சூழலில் அந்த மகள் எத்தகைய சோகத்தை வெளிப்படுத்துகிறாள் என்பதே இந்த வீடியோ.

 little girl

மாட் – ஜென்னா அட்கின்சன் தம்பதியின் மூன்று வயது மகள் பெல்லா. இவருக்கு தனது தந்தை என்றால் கொள்ளை பிரியம். ஒருநாள் பெல்லா, பெற்றோரின் திருமண புகைப்பட ஆல்பத்தை பார்த்த கதறி அழுதுள்ளார். பின்னர், தாயைப் பார்த்து தந்தையை திருமணம் செய்து விட்டீர்களா என கேள்வியெழுப்பியுள்ளார். அதற்கு தாயும், ஆமாம் என விளையாட்டாக பதில் அளித்துள்ளார். உடனே அந்த பதிலை ஏற்றுக்கொள்ள முடியாத அந்த சிறுமி கதறி அழுதுள்ளார். என்னுடைய சூப்பர் ஹூரோ, ட்ரீம் பாயை நீங்கள் ஏன் திருமணம் செய்தீர்கள் என தாயிடம் பெல்லா மழலை மொழியில் கேள்வி எழுப்பியுள்ளார். உடனே பெல்லாவின் தாய், அவரிடம் பொறுமையாக பேசி புரிய வைத்துள்ளார். ஆனால் தாயின் பேச்சை கேட்க மறுத்த அந்த சிறுமி, வெகுளியாக அழும் காட்சிகள் சமூக வலைதளத்தை அசைத்து பார்த்துள்ளது.

நான் திருமணம் செய்ய நினைத்த என் தந்தையை நீங்கள் ஏன் திருமணம் செய்து கொண்டீர்கள்? என பெல்லா கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த சிறுமியின் தாய், நான் திருமணம் செய்து கொண்டதால் தந்தையை நீ திருமணம் செய்து கொள்ள முடியாதா என கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த சிறுமி ஒரு மனிதன் ஒருவரைதான் திருமணம் செய்ய முடியும், தந்தையை நீங்கள் திருமணம் செய்துகொண்டதால் என்னால் அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என அழகாக அழுதுகொண்டே எடுத்துக்கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்கலாமே: ஜோ பிடன் ஒரு முட்டாள்; கமலா ஹாரிஸ் திறமையற்றவர்- அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa