செவ்வாயில் நாசா கால்பதிக்க காரணமான இந்திய வம்சாவளி!

Swati-Mohan-2

சிவப்பு கோளான செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலம் நேற்று அந்த கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

அந்த விண்கலத்தின் வழிநடத்தும் குழுவின் தலைவராக இருந்தது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுவாதி மோகன் என்பது தெரியவந்துள்ளது.

விண்வெளி மற்றும் விமானத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற சுவாதி மோகன், கர்நாடகா மாநிலம் பெங்களூரிவில் பிறந்து அமெரிக்காவில் குடும்பத்துடன் குடிபெயர்ந்தவர்கள்.

swati

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா என்ற ஆய்வுக்காக பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலத்தை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் தேதி நாசா செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.

சுமார் 6 மாத பயணத்துக்கு பின் இந்த விணகலம் நேற்று செவ்வாய் கிரகத்தின் மத்திய பகுதியில் தரையிறங்கியது.

ஆழமான பள்ளத்தில் தரையிறங்கிய ரோவர், அங்கிருந்து புகைப்படங்களை எடுத்து நாசாவுக்கு அனுப்பிவைத்தது.

செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் இந்த ரோவர், அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்பி எடுத்துவரவுள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பெர்சிவரன்ஸ் ரோவர் செவ்வாயில்தான் இருக்கும். இந்த ரோவரின் சக்கரங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியது சுவாதிதான்.

இவர் விண்வெளி ஆய்வில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுடன், ஆராய்ச்சி முடித்து, டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்த பெர்சிவரன்ஸ் ரோவர் திட்டத்திற்காக சுவாதி உழைத்து கொண்டிருந்தார்.

இதுமட்டுமின்றி நாசாவின் சனி தொடர்பான ஆராய்ச்சி மற்றும், நிலவு பயண திட்டங்களிலும் சுவாதி பணியாற்றியுள்ளார். அமெரிக்கவாழ் இந்தியரான சுவாதியால் இந்தியாவுக்கே பெருமை!