ராணுவ வீரரை காதலிக்கும் மெலனியா ட்ரம்ப்!

melania- trump

அமெரிக்காவில் கடந்த 3 ஆம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், முன்னாள் துணை அதிபருமான ஜோ பைடன் வெற்றிப்பெற்றார். வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்க அதிபராக பொற்றுப்பேற்க உள்ளார்.

ஏற்கனவே அதிபர் பதவியை இழந்து தவிக்கும் டொனால்ட் டிரம்புக்கு மேலும் ஒரு பேரிடியாக இருந்தது அவரது மூன்றாவது மனைவி மெலனியா அவரை விவாகரத்து செய்யவிருக்கிறாராம்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு மொத்தம் 3 மனைவிகள். அவரது முதல் மனைவி ‘இவானா டிரம்ப்’. இவருடன் 1977ல் திருமணம் நடந்தது. 14 ஆண்டு கால வாழ்க்கைக்குப் பின்னர் 1991-ல் இந்தத் தம்பதியர் பிரிந்தனர்.

இரண்டாவது மனைவி ‘மார்லா மேப்பில்சு’. இவருடன் 1993-ல் திருமணம் நடந்தது. 6 ஆண்டு கால தாம்பத்ய வாழக்கைக்குப் பின்னர் 1999-ல் இவர்கள் பிரிந்தனர்.

Melania

தற்போது 3-வது மனைவியான மெலேனியாவும், பாரன் டிரம்பு என்ற 14 வயது மகனுடனும் வசித்து வருகிறார் டொனால்ட் ட்ரம்ப். டிரம்புக்கும் – மெலனியாவுக்கும் திருமணம் நடைபெற்று 15 ஆண்டுகள் ஆகின்றன.

இருவருக்கும் இடையே 25 வயது வித்தியாசம் உள்ளது. இந்த சூழலில்தான் ட்ரம்பை விட்டு மெலனியா பிரிந்து செல்லவிருக்கிறார் என்ற தகவலும் கடிந்தது.

டிரம்ப்- மெலனியா தம்பதியின் 15 ஆண்டுகால திருமண பந்தம் முடிந்துவிட்டது என்றும் ட்ரம்ப் பதவியில் இருந்து வெளியேறினால் மெலனியா டிரம்ப் விவகாரத்து செய்துவிடுவார் என்றும் வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த சூழலில் ட்ரம்பை விவாகரத்து செய்ய மெலனியா முடிவு செய்தால் விவாகரத்து தீர்வுக்கு இந்திய மதிப்பு ரூ. 372 கோடி பெறக்கூடும் என்று சட்ட நிபுணர் பெர்க்மேன் பாட்ஜர் நியூமன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ட்ரம்பின் முதல் மனைவி இவானா டிரம்பை விவாகரத்து செய்த போது அவருக்கு 14 மில்லியன் அமெரிக்க டாலர், மற்றும் இரண்டு மாளிகை வீடுகள் வழங்கப்பட்டன.

இரண்டாவது மனைவி, மார்லா மேப்பில்சுக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ராணுவ வீரர் ஒருவரை மெலனியா காதலித்து வருவதாகவும், அவரை சட்டப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே ட்ரம்பை விவாகரத்து செய்யவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

போர் வீரர்கள் நினைவு தினக் கூட்டத்தில் இளம் வயது ராணுவ வீரர் ஒருவரது, கைகளை கோர்த்து பிடித்தபடி மெலனியா சென்ற புகைப்படங்கள் வெளியாகி மெலனியாவின் காதலை ஊர்ஜிதப்படுத்தின.

இதையும் படிக்கலாமே: அமெரிக்காவின் 46ஆவது அதிபரானார் ஜோ பைடன்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter