கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தயாரான வெள்ளை மாளிகை!

Christmas

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மனைவியான மெலனியா டிரம்ப் வெள்ளை மாளிகையை கிறிஸ்துமஸ் மரங்களால் அலங்கரித்துள்ளார்.

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அமெரிக்காவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ளது. நன்றி தெரிவிக்கும் சம்பிரதாயத்துடன் Thanksgiving ceremony வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கப்பட்டன.

டொனால்ட் ட்ரம்ப அதிபராக வெள்ளை மாளிகையில் கொண்டாடும் கடைசி கிறிஸ்துமஸ் இதுவாகும். அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடன் (Joe Biden) ஜனவரி மாதம் 20 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.

தற்போதைய அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் காலம் நெருங்கி கொண்டே இருப்பதால் கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாக கொண்டாட மெலனியா ட்ரம்ப் விரும்பிகிறார்.

Melania 'delighted' to mark holidays after being caught on tape asking who  cares 'about Christmas stuff?' - Alternet.org

 

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெள்ளை மாளிகை முழுவதும் கிறிஸ்துமஸ் மரங்களை வைத்து அதில் பல்வேறு வண்ணங்களால் ஆன விளக்குகளை ஒளிர செய்தார்.  கடந்த மூன்று ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டு அலங்காரங்களையும்  மெலனியா டிரம்ப் கண்காணித்தார்.

அதுமட்டுமின்றி அழகான அமெரிக்கா என்ற தலைப்பில் அலங்காரங்களை செய்திருப்பதாகவும் அதனை மக்களுக்கு காட்சிப்படுத்தியிருப்பதாகவும் மெலனியா ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகை அலங்கார பணிக்கு 125க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளை மாளிகையில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடன் ஜனவரி மாதம் பதவியேற்றுக் கொண்ட பிறகு, வெள்ளை மாளிகையில் அடுத்த ஆண்டு அவர் கிறிஸ்துமஸை கொண்டாடுவார்.

இதையும் படிக்கலாமே: மோடியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த இவாங்கா!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter