அமெரிக்காவின் சுதந்திர தினத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அமெரிக்கா 245 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடியதை முன்னிட்டு அதிபர் ஜோ பைடனுக்கும் அமெரிக்க மக்களுக்கும் பிரதமர் மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்த நிலையில் அது மறைமுகமாக சீனாவுக்கு விடுத்த எச்சரிக்கையாகவும் கூறப்படுகிறது.

மூன்று நாட்களுக்கு முன்பு சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிய போது மௌனம் காத்த பிரதமர் அமெரிக்காவுக்கு வாழ்த்து கூறியிருப்பது பல்வேறு அனுமானங்களை எழுப்பியுள்ளது.

modi - biden

சீனாவுக்கு மார்க்சிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளைத் தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் எந்த அரசு துறை சார்பிலும் வாழ்த்து தெரிவிக்கப்படவில்லை.

லடாக் எல்லையில் சீனா படைகளைக் குவித்து ஆக்ரமிப்பது இதற்கான முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.

தமது டிவிட்டர் பதிவில் அமெரிக்காவுக்கு வாழ்த்து கூறிய மோடி அமெரிக்காவும் இந்தியாவும் சுதந்திரம் மற்றும் விடுதலை உணர்வை போற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளிடையே உள்ள நட்புறவு உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

ஆற்றல் மிக்க ஜனநாயக நாடுகள் என்ற வகையில், இந்தியாவும், அமெரிக்காவும், சுதந்திரம் மற்றும் உரிமைகளின் மாண்புகளை பாதுகாப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.