அமெரிக்காவில் 6 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு!

Coronavirus

அமெரிக்காவில் கடந்த மார்ச் மாதம் முதல் சுமார் 6,00,000 குழந்தைகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

Coronavirus
Image: AFP

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 5 ஆயிரமாக அதிகரித்துள்ள நிலையில் 71 லட்சத்து 60 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்று ஏற்பட்ட மார்ச் மாதம் முதல் சுமார் 6,24,890 குழந்தைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது மருத்துவமனைகளில் குழந்தைகள் இறப்பு மற்றும் சேர்க்கை சதவீதம் குறைந்துள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சேர்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. குறிபாக அமெரிக்காவின் தென்பகுதியில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பில் கலிபோர்னியா மாகாணம் முதலிடத்திலும், உயிரிழப்பில் நியூயார்க் மாகாணம் முதலிடத்திலும் உள்ளன.

இதனிடையே கொரோனா தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் பணியில் அமெரிக்கா தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: வீட்டிற்குள் புகுந்து பலரை சரமாரியாக சுட்டுக்கொன்ற மர்மநபர்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter