முடங்கிய இணையதள உலகம்! காரணம் என்ன?

Internet

இன்று உலகளவிலான இணையதளம் முடக்கம் மற்றும் பாதிப்பு காரணமாக செய்தி நிறுவனங்களின் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது.

இண்டர்நெட் பல பகுதிகளில் திடீரென சிறிது நேரம் முடங்கியதால் புகழ்பெற்ற இணைய தளங்களும் முடங்கின. அமேசான் டாட்காம் உள்ளிட்ட இணைய தளங்களும், ரெட்டிட் ((Reddit)), ஃபைனான்சியல் டைம்ஸ், கார்டியன், நியூயார்க் டைம்ஸ், ஃபுளூம்பெர்க் டைம்ஸ் உள்ளிட்ட செய்தி இணைய தளங்களும் சிறிது நேரம் முடங்கின.

What is a 503 Service Unavailable Error? [+How to Fix It]

இதன் காரணமாக மேற்கண்ட இணையதளங்களை திறக்க முயன்றபோது, ‘Error 503 Service Unavailable’ என்ற தகவல் இடம்பெற்றிருந்தது.

இதற்கான காரணங்கள் குறித்து இணைய தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்தனர்.

அரசு இணைய தளங்கள், சமூக வலைத்தளங்களும் சிறிது நேரம் முடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவை சேர்ந்த, க்ளவ்டு கம்ப்யூட்டிங் சேவை வழங்கும் நிறுவனமான Fastly சர்வர்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, இணைய தளங்கள் முடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் அரை மணி நேர முடக்கத்துக்கு பிறகு இந்த இணையதள சேவைகள் சீரடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.