பெண்ணை கொலை செய்து இதயத்தை சமைத்து சாப்பிட்ட கொடூரன்

Victim

அமெரிக்காவில் மூன்று பேரை கொலை செய்த கொடூரன் ஒருவன், அப்போது இறந்து போன ஒருவரின் இதயத்தை சமைத்து சாப்பிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒக்லஹாமா நகரை சேர்ந்தவர் லாரன்ஸ் பால். இவர் ஒரு பெண்ணை கொலை செய்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த பெண்ணின் உடலிலிருந்து இதயத்தை பிரித்தெடுத்து தனது உறவினர் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு அந்த இதயத்தை, உருளைக்கிழங்கு, மசாலா ஆகிவற்றுடன் சேர்ந்து சமைத்துள்ளார். அதன் பின், வறுத்த இதயத்தை அந்த நபரும் அவருடைய உறவினரும், மனைவி மக்களோடு அமர்ந்து ருசித்துள்ளனர்.

Murder Accused Cooked Victim's Heart With Potatoes To Serve His Family

நர மாமிசம் வாந்தி வருவதுபோல் இருந்ததால் கொலையாளியின் உறவினர்கள் அதனை சாப்பிட மறுத்துவிட்டனர். இதனால் சாப்பிட்டுக்கொண்டிருந்த கொடூரன் லாரன்ஸ், திடீரென ஆத்திரமடைந்து, மூன்று பேரை சரமாரியாக அடித்து கொலை செய்தார்.

இதில் லாரன்ஸ்க்கு வீட்டில் இடம் கொடுத்த அவரது உறவினரும், அவரது பேத்தியும் உயிரிழந்தனர். உறவினரின் மனைவி மயங்கமடைந்து கீழே விழுந்துள்ளார். உடனே லாரன்ஸ் அங்கிருந்து தப்பியோடி விட்டான்.

சத்தம்கேட்டுவந்த அக்கம் பக்கத்தினர், சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் லாரன்ஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது அவர், நடந்த சம்பவத்தை விளக்கமாக தெரிவித்தார். அவர் விளக்கமளித்த வாக்குமூலம் மிகவும் அதிர்ச்சியாக இருந்தன.

அதாவது, ”உறவினரின் குடும்பத்தை பிடித்திருந்த, பிசாசை ஓட்டுவதற்காகவே அவர்களுக்கு இதய வறுவலை சாப்பிடக் கொடுத்தேன்.

அவர்கள் அதனை சாப்பிடாமல் குமட்டியதால் கோபமடைந்து, கொலை செய்தேன்” தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.