சிறுமியை 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்!

Rape

அமெரிக்காவில் சிறுமியை இரண்டரை ஆண்டுகளாக வன்கொடுமை செய்த 59 வயது முதியவருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு என்ன தான் படிப்பறிவும், விழிப்புணர்வும் இருந்தாலும் பெண்களுக்கு மீதான வன்கொடுமைகளும், குற்றங்களும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. வளர்ந்துவரும் நாடுகளுக்கு மட்டுமல்ல, நன்கு வளர்ச்சியடைந்த வல்லரசு நாடுகளிலும் இந்த மாதிரியான கொடுமை தொடர்ந்து அரங்கேறி கொண்டுதான் இருக்கின்றன. அதிலும் சிறுமிகளுக்கு நடக்கும் குற்றங்கள் கொடுமையின் உச்சக்கட்டம்…

சவுத் கரோலினா பகுதியை சேர்ந்த கெவின்(59), கடந்த 2013 ஜனவரியில் இருந்து 2015 ஜூலை வரை சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். அந்த முதியவரால் அச்சிறுமி 6 வயதில் இருந்து 8 வயது வரை சிறுமி கொடுமையை அனுபவித்திருக்கிறார். ஒருநாள் சிறுமியின் தோழி இதை கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயிடம் தெரியப்படுத்தியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தாயார் கெவின் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அவரது புகாரை தொடர்ந்து கெவினை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியை 2 ஆண்டுகளாக வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக எடுத்து வைத்திருந்தன. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜெவின் குற்றவாளி என தீர்ப்பளித்தது. தொடர்ந்து அவருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. தற்போது 13 வயதாகும் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை தைரியமாக நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார். அதனாலேயே கெவினின் உண்மை முகம் தெரியவந்துள்ளது.

இதையும் படிக்கலாமே:  தள்ளிவைக்கப்படுகிறதா அதிபர் தேர்தல்..?

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter

 

Related posts