ஹனிமூன் சென்ற தம்பதிக்கு நேர்ந்த கொடுமை!

New couple

அமெரிக்காவில் ஹனிமூன் சென்ற புதுமண தம்பதி கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வட கரோலினாவை சேர்ந்த பிரபல கார் பந்தய நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்த வில்லியம் ரவுடி ஹாரேல் என்பவருக்கும் பிளாக்ளி ஹாரேல் என்பவருக்கும் கடந்த சனிக்கிழமை திருமணம் முடிந்தது.

இருவரும் புளோரிடா கீஸ் என்ற தீவுகளுக்கு ஹனிமூன்க்கு சென்றனர். காரில் இருவரும் சென்றுகொண்டருந்தபோது எதிரே வந்த கார் மோதியது.

new bride

இதில் வில்லியம் ரவுடி ஹாரேலும், பிளாக்ளி ஹாரேல் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ட்ரக்கில் பயணித்த 62 வயதான நபர் மற்றும் இரு பெண்கள் ஆகிய மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

உடனடியாக அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மது அருந்திவிட்டு ட்ரக் ஓட்டிவந்ததே விபத்துக்குக் காரணம் என கூறப்படும் நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

திருமணமாகி நான்கே நாட்களில் இளம் தம்பதியர் உயிரிழந்த சம்பவம் அவர்கள் குடும்பத்தாரிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வில்லியமுடன் பணிபுரிந்த மான்கி ஜெஃபர்ஸ் ஒருவர், “வில்லியம் இறந்த செய்தி மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மிகவும் திறமையானவர், கடுமையான உழைப்பாளி. அவரது குடும்பத்துக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். வில்லியம் இறந்ததை இன்னும் நம்ப முடியவில்லை.” எனக் கூறினார்.

அவர்களது திருமணத்திற்கு புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞரான ஹன்னா ஷாரீ, வில்லியமும் அவரது மனைவியும் ஒருவருக்கொருவர் மிகவும் அன்பு வைத்திருந்தனர்.

இதையும் படிக்கலாமே: ஹனிமூன் சென்ற தம்பதிக்கு நேர்ந்த கொடுமை!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter