பூங்காவில் துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி

Shooting

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பூங்காவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும், கத்திக்குத்து சம்பவங்களும் நடைபெறுவது தொடர்கதையாகிவருகின்றன. பொது இடங்களிலும், மத வழிபாட்டு தலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதனால் பொதுமக்கள் பலர் உயிரிழந்துவருகின்றனர்.

இந்நிலையில் நியூயார்க் நகரில் உள்ள மார்ட்டின் லூதர் கிங் உள்ள ஒரு பூங்காவிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார். பூங்காவில் சிறுவர்களும், வயதானவர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் அங்கிருந்தவர்கள் அச்சத்தில் உறைந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 21 வயது நிரம்பிய நபர் மற்றும் 19 வயது நிரம்பிய நபர் என இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.

shooting

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 21 வயது நிரம்பிய நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு நபர் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். கொலையாளி குறித்து தகவல் தெரிந்தவர்கள் 1-800-244- இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவுப்படுத்துமாறு காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிக்கலாமே: அமெரிக்காவில் உழவர் சந்தை அமைத்த தமிழர்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter