புற ஊதாக்கதிர்கள் கொரோனா வைரசை கொல்லும்

coronavirus

புற ஊதாக் கதிர்கள் மூலம் கொரேனா வைரசை அழிக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு நாள் இன்றுக்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

இதுவரை 67 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

coronavirus

இந்நிலையில் இந்த ஆண்டுக்குள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ஆய்வறிக்கை அமெரிக்க இதழில் வெளியாகியுள்ளது. 222 நானோ மீட்டர் அலைநீளம் கொண்ட புற ஊதாக் கதிர்கள் கொரோனா வைரசை கொல்வது ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அலை நீளமுள்ள கதிர்கள் மனித உடலுக்கு எவ்வித பாதிப்பையு‌ம் ஏற்படுத்தவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வைரஸ் இருக்கும் பரப்பில் 30 வினாடிக‌ள் புற ஊதாக் கதிர்களை செலுத்துவதால் அங்குள்ள 99.7% கிருமிகள் அழிந்துவிட்டதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது இடங்களை தூய்மைப்படுத்த சிறந்த முறையாக புற ஊதா கதிர் செலுத்துவது மாறும் என கருதப்படுகிறது

இதையும் படிக்கலாமே: டிக்டாக், விசாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை!

FB Page
– https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
– https://twitter.com/tamilmicsetusa