அமெரிக்காவில் பிறந்த குழந்தையை ஜன்னல் வழியாக தூக்கி வீசிய இந்திய வம்சாவளி பெண்!

New York woman

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனக்கு பிறந்த குழந்தையை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க் மாகாணத்தில் குயின்ஸ் பகுதியில் வசித்துவரும் இந்திய வம்சாவளியான சபிதா என்ற பெண்ணுக்கு கடந்த சனிக்கிழமை ஆண்குழந்தை பிறந்துள்ளது. பெற்ற குழந்தையை குளியலறை ஜன்னல் வழியே தூக்கி வீசியுள்ளார் சபிதா.

இதில் கீழே விழுந்த அந்த குழந்தைக்கு மண்டையில் காயம் ஏற்பட்டதுடன், எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. அக்குழந்தையை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அந்த ஆண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சபிதாவை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

New York woman

விசாரணையில் முறைகேடாக பிறந்த குழந்தை என்பதால் வீட்டிற்கு தெரியக்கூடாது என குளியலறையிலிருந்து தூக்கி வீசியதாகவும், குளிக்க சென்ற போது திடீரென குழந்தை பிறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

குளியலறையிலிருந்த கத்திரிக்கோலைப் பயன்படுத்தி தொப்புள் கொடியை அறுத்ததாகவும் சபிதா தெரிவித்துள்ளார். விசாரணைக்கு பின் காவல்துறையினர் அவரை நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவருக்கு எதிராக வாதிட்ட வழக்கறிஞர் மெலிசா, மனிதாபமின்றி நடந்து கொண்ட சபிதா குற்றத்தை மறைப்பதற்காக பொய் சொல்கிறார் என்றும், அவருக்கு ஜாமீன் அளிக்க 50,000 டாலர் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையை வழங்க வேண்டுமென வாதிட்டார்

இந்திய வம்சாவளியான சபிதாவின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்படி அமெரிக்கா சென்ற பின் இவ்வளவு தைரியம் வரக்கூடும், யாருடைய துணையும் இல்லாமல் எப்படி குழந்தை பெற்றடுக்கக்கூடும் என பல இந்திய வம்சாவளியினர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

இதையும் படிக்கலாமே: இந்தியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்த அமெரிக்கா!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter