தாய் பால் கொடுத்தால் குழந்தைக்கு கொரோனா பரவுமா?

Mom & baby

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,20,900 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஒரேநாளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு இதுவரை 80 லட்சத்து 93ஆயிரத்து 600 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Mom & baby

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தாய் தகுந்த பாதுகாப்புடன் பால் கொடுத்தால் குழந்தைக்கு வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே புதிதாக குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்கள் குழந்தையை விட்டு பிரியவேண்டிய சூழல் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாமா பீடியாட்ரிக்ஸ் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி, கடந்த மார்ச் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் 24 ஆம் தேதி வரை அமெரிக்காவின் நியூயார்க்-பிரஸ்பைடிரியன் மருத்துவமனையில் கொரோனா தொற்றுகு ஆளான தாய்மார்களிடம் நடத்தப்பட்ட ஆய்வை அடிப்படையாக கொண்டது. முகமுடி அணிதல், தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் மார்பகம் மற்றும் கைகளை சுத்தமாக கழுவுதல் போன்ற சில விஷயங்கள் நோய் பரவலை தடுக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் தொற்றுக்கு ஆளான தாய்மார்களிலிருந்து குழந்தைகளின் தொட்டி, 6 அடி தொலைக்கு அப்பால் இருத்தல் நன்மை பயக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்கலாமே: எனக்கு எல்லாருக்கும் முத்தம் கொடுக்கணும் போல இருக்கு- அதிபர் ட்ரம்ப்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter

Related posts