ஆன்லைனில் மட்டும் படிக்கவிருக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கப்படாது!

ஆன்லைன் மூலமாக மட்டும் படிக்கவிருக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கப்படாது என அமெரிக்க அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான பல்கலைக் கழகங்கள் ஆன்லைன் வழியாக செமஸ்டர் வகுப்புகளை நடத்த அறிவித்து இருந்தன. இந்நிலையில், ஆன்லைன் மூலமாக மட்டுமே பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் நாடு கடத்தப்படுவர் என அமெரிக்க அரசு உத்தரவிட்டு இருந்தது .

Students
இதனை எதிர்த்து பல்கலைக் கழகங்களின் சார்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், சர்ச்சைக்குரிய முடிவை அமெரிக்க அரசு கைவிட்டது. இந்நிலையில், ஆன்லைனில் மட்டும் பயிலும் நடைமுறையை தேர்வு செய்யும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிதாக விசா வழங்கப்படாது என டொனால்ட் ட்ரம்ப் அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இம்முடிவு வரும் செமஸ்டரில் அமெரிக்கா சென்று படிக்கவிருந்த மாணவர்களுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

அமெரிக்கா செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetusa

Twitter : https://twitter.com/tamilmicsetusa