பார்க்கிங் விதிமீறல் குறித்து புகார் அளிப்பவர்களுக்கு 43 டாலர்கள் சன்மானம்!

parking

எவ்வளவுதான் நோ பார்க்கிங், நடைபாதை நடப்பதற்கே என்றெல்லாம் விளம்பரப்பலகை வைத்தாலும் பார்க்கிங் விதிமீறல்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

பார்க்கிங் தொடர்பான விதிமுறை மீறல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்க அமெரிக்காவின் நியூயார்க் நகர அரசு திட்டமிட்டுள்ளது. நோ பார்க்கிங் என பலகை வைத்துள்ள இடங்களில் முறைகேடாக வாகனங்களை பார்க்கிங் செய்துள்ளவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு, பார்க்கிங் செய்தவரிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராத தொகையின் ஒரு பகுதி சன்மானமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் நோ பார்க்கிங்-கில் வாகனம் நிறுத்துவதை தடுக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விதிமீறல்கள் கட்டுக்குள் வரும் என்றும் கூறப்படுகிறது.

Why New York City should eliminate free on-street parking - Curbed NY

நியூயார்க் நகரில் பார்க்கிங் தொடர்பான விதிமீறல்களுக்கு தற்போது 115 அமெரிக்க டாலர்கள் அபராதமாக வசூலிக்கப்படுகிறது. அதனை தற்போது 175 அமெரிக்க டாலர்களாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 25 சதவீத தொகையை புகார் அளிக்கும் நபருக்கு சன்மானமாக வழங்க நியூயார்க் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்துவது, மக்களுக்கு மட்டுமின்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. சில சமயங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கும் பிரச்னை ஏற்படுகிறது. இதனை தடுக்கவே இந்த சிறப்பு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் நோ பார்க்கிங்கில் வாகனங்கள் நிறுத்தப்படுவது குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: அமெரிக்காவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 2,000 பேர் பலி!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter