அமெரிக்காவில் மருத்துவமனைக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்திய முதியவர்!

health clinic

அமெரிக்காவில் மருத்துவமனைக்குள் நுழைந்து அங்கிருப்பவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திய 67 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.

மினிசோட்டா நகரில் உள்ள அலினா என்ற மருத்துவமனைக்குள் புகுந்த 67 வயது முதியவரான கிரிகொரி பால், அங்கிருந்த ஊழியர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

அதுமட்டுமின்றி தன் வசமிருந்த வெடிகுண்டையும் வீசியுள்ளார். இதில் நான்கு மருத்துவமனை ஊழியர்கள் படுகாயமடைந்தனர்.ஒருவர் உயிரிழந்தார். இறந்த ஒருவர் அடையாளம் காணப்படவில்லை.

ulrich.jpg

மேலும் படுகாயமடைந்தவர்களில் மூன்று பேர் மிகவும் அபாயகரமான கட்டத்தில் இருப்பதாக தெரிகிறது.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் முதியவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கிரிகொரி அலினா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்ததாகவும், அங்குள்ள ஊழியர்கள் சரியாக கவனித்துக்கொண்டால் அதிருப்தியில் இருந்த அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தெரிகிறது.

சம்பவம் நடந்த பகுதிக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.