அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பயில இணைய வழி கலந்தாலோசனை

Online consultation

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பயில்வது குறித்து பல்கலைக்கழகப் பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனை நிகழ்ச்சி வரும் அக்டோபா் 2, 3 ஆகிய தேதிகளில் இணையம் வழியாக நடைபெறவுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் அனைத்து வகுப்புகளையும் ஆன்லைனில் நடத்த அமெரிக்கா பல்கலைக்கழகங்கள் திட்டமிட்டுள்ளன. இதனால் அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், பல்கலைக்கழக விடுதியிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு குடியுரிமைத்துறை அறிவித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து அந்த உத்தரவை ட்ரம்ப் தலைமையிலான அரசு திரும்ப பெற்றது. கடந்த ஆண்டில் மட்டும், சீனாவில் இருந்து, நான்கு லட்சத்து, 74 ஆயிரத்து, 497 மாணவர்களும், இந்தியாவில் இருந்து, இரண்டு லட்சத்து, 49 ஆயிரத்து, 221 மாணவர்களும், அமெரிக்காவிற்கு படிக்க வந்திருப்பதாக அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ஏனெனில் அமெரிக்காவில் படிக்க வேண்டுமென்பது ஒவ்வொரு மாணவர்களின் கனவு. ஆனால் எப்படி அணுகுவது, என்ன படிக்கலாம் என்பன போன்ற கருத்துக்களில் சந்தேகம் இருக்கலாம்.

online classes

இந்நிலையில் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பயில்வது குறித்து பல்கலைக்கழகப் பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனை நிகழ்ச்சி வரும் அக்டோபா் 2, 3 ஆகிய தேதிகளில் இணையம் வழியாக நடைபெறவுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இவா்களுடன் மாணவா்கள், அங்குள்ள கல்விச் சூழல், பாதுகாப்பு, தங்கும் வசதி உள்ளிட்டவை குறித்து நேரடியாக கலந்துரையாடலாம். அக்டோபர் 2 மற்றும் 3 ஆம் தேதி மாலை 5.30 முதல் இரவு 10.30 வரை இணையவழியில் நடைபெறவுள்ளது. இதே போல் இளநிலைக் கல்வி பயில விரும்புவோருக்கு அக்டோபர் 9 மற்றும் 10 ஆம் தேதி ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே:  ‘விழித்திடு அமெரிக்கா…. ஜோபிடன், கமலா ஹாரிஸ்க்கு வாக்களித்திடு’ இந்தியர்களை வைத்து வாக்கு சேகரிக்கும் ஜோபிடன்

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa