அமெரிக்காவிலும் இனி கையேந்தி பவன்!

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி நடைமுறைகளையும், வாழ்க்கை முறைகளையும் மாற்றியுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு நாள் இன்றுக்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

இதுவரை 70 லட்சத்து ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சுமார் 2 லட்சத்து 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

 restaurant

இந்நிலையில் இந்த ஆண்டுக்குள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் கொரோனா பரவல் காரணமாக திறந்தவெளி உணவகங்களை நிரந்தரமாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் வரும் 30 ஆம் தேதி முதல் 25 சதவீத திறனுடன் உட்புற உணவகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் மாதம் முதல் வெற்றிகரமாக செயல்பாட்டில் உள்ள திறந்த வெளி உணவகங்களை விரிவுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது வாகன போக்குவரத்து இல்லாமலும், போக்குவரத்துக்கு வசதிக்கு இடையூறு இல்லாமலும் இருக்கும் வகையில் தெருக்களில் திறந்தவெளி உணவகங்களை உருவாக்கி அதில் பொதுமக்கள் உணவருந்தும் வகையில் வடிவமைக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். எனவே இனி இந்தியாவில் இருப்பது போன்று அமெரிக்காவிலும் கையேந்திபவன்கள் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிக்கலாமே: அமெரிக்காவில் பெரியார் புகழ்பாடும் சிறுவர்கள்

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa