துர்காவாக மாறி ட்ரம்பை வதம் செய்யும் கமலா ஹாரிஸ்!

durga

இந்திய வம்சாவளியும் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிசை இந்துக்கடவுளான துர்காவாக சித்தரித்து வெளியிடப்பட்ட புகைப்படம் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார்.

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார்.

ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது

இந்நிலையில், கமலா ஹாரிஸின் சகோதரியின் மகள் மீனா ஹாரிஸ், தனது நவராத்திரி வாழ்த்தில், துர்காவாக சித்தரிக்கப்பட்ட கமலா ஹாரிஸ், அதிபர் ட்ரம்பை வதம் செய்வது போன்ற கிராபிக்ஸ் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் துர்காவின் வாகனமான சிங்கம், ஜோ பைடன் முகமாக சித்தரிக்கப்பட்டிருந்தது. இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ட்விட்டரிலிருந்து அந்த புகைப்படம் நீக்கப்பட்டது. இந்த நிகழ்வு இந்து சமூகத்தை புண்படுத்துவதாகவும், இதற்காக மீனா ஹாரிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அமெரிக்காவிலுள்ள இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. இதேபோல் கமலா ஹாரிஸின் பிரச்சாரக்குழுவும் உருவாக்கவில்லை. எனினும் அவரின் சித்தரிப்பு புகைப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பிடன் ஆகியோர் வாழ்த்து பதிவிட்டுள்ளனர்.

இதையும் படிக்கலாமே:  கொட்டும் மழையில் நடனத்துடன் பரப்புரை மேற்கொண்ட கமலா ஹாரிஸ்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter