அமெரிக்க நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்குதல்?

Parliament

அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தின் மீது கடந்த 4 ஆம் தேதி மர்ம நபர் திடீரென தாக்குதல் நடத்த முயன்றபோது ஒரு போலீஸ் கொல்லப்பட்டார்.

கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதி அமெரிக்க அதிபராக பைடனை தேர்ந்தெடுக்கும் நிகழ்வின் போது, நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் வன்முறை ஏற்பட்டது.

Terror suspect crashes car into cyclists and barrier at British Parliament  - ABC News

ட்ரம்பின் தூண்டுதலால் அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் அத்துமாறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும் இதில் பலர் உயிரிழந்ததாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் மீண்டும் தாக்குதல் சம்பவம் நடந்திள்ளது.

அங்கு வழக்கம் போலப் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, வேகமாக வந்த கார் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைய முயன்றது. அங்கிருந்த போலீசார் அந்த காரை நிறுத்த முயன்றனர்.

ஆனால் அந்த கார் நிற்காமல் போலீசார் மீது மோதி நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கிச் செல்ல முயன்றது, அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த தடுப்பு ஒன்றில் கார் மோதி திடீரென நின்றது.

அந்த காரில் இருந்து வெளியே வந்த மர்ம நபர் கத்தியுடன் போலீசார் மிரட்டினார். இதில் ஒரு போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

தாக்குதல் நடத்த முயன்ற ஆப்பிரிக்க அமெரிக்கரான அந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த பரபரப்பு சம்பவம் நடந்த சமயத்தில் பைடன் நாடாளுமன்றத்தில் இல்லை என்பது குறிப்பிடதக்கது