அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது!

Vaccine

அமெரிக்காவில் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே நாட்டின் தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இதனிடையே கடந்த 14 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பைடன், மைக் பென்ஸ் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதன்மூலம் மக்களுக்கு தடுப்பூசி மீதான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்கா இன்று மிக முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இன்று வரை சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. முன்களப்பணியாளர்கள் மட்டுமின்றி அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டுக்குள் அதாவது இனும் 6 நாட்களுக்குள் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம். அடுத்த வருட இறுதிக்குள் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளோம்.

இருப்பினும் மக்கள் கவனமாகவும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிக்கலாமே: மாடர்னா நிறுவனத்தின் கோவிட் தடுப்பூசி 94% பலன்.!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter