அதிபர் ட்ரம்பின் தேர்தல் பரப்புரைக்கு ஒரு லட்சம் இந்தியர்கள் ஆதரவு!

அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளி வாக்காளர்களின் ஓட்டு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்ட நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தேர்தல் பரப்புரையை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் இணையத்தில் பார்த்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார். ஆனால் கொரோனா பரவலை தடுக்க தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடப்போவதில்லை என ஜோ பிடன் தெரிவித்துள்ளார். மாறாக இணையவழி பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ள ஜோ பிடன் அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு கொரோனா விவகாரத்தை திறம்பட கையாளவில்லை, கறுப்பின மக்களுக்கு ட்ரம்ப் ஆட்சியில் பாதுகாப்பில்லை எனக் கூறி வாக்குகளை சேகரித்துவருகிறார். ஆனால் அமெரிக்க இந்தியர்கள் ஜோ பிடனுக்கு வாக்களிக்கப்போகிறார்களா? அல்லது அதிபர் ட்ரம்பிற்கே மீண்டும் வாக்களிக்கப்போகிறார்களா? என்பது மிகப்பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

US polls

இந்நிலையில் அதிபர் ட்ரம்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ‘Hindus 4 trump’ என்ற பரப்புரை கூட்டம் வீடியோ கான்பிரன்ஸ் வழியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை வீட்டிலிருந்தபடியே இணையத்தில் 30 ஆயிரம் இந்தியர்கள் நேரடி ஒளிபரப்பில் பார்த்து, தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். நேரடி ஒளிபரப்பு முடிந்த பின்பு, 70 ஆயிரம் இந்தியர்கள் இணையத்தில் இந்நிகழ்ச்சியை பார்த்து அதிபர் ட்ரம்பிற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக ட்ரம்பின் பிரசார குழுவை சேர்ந்த அல் மாசோன் தெரிவித்துள்ளார்.

கடந்த, 1992லிருந்து, ஜனநாயக கட்சிக்குதான் அமெரிக்க இந்தியர்கள் ஆதரவு தெரிவித்து வந்ததாகவும், சமீப காலமாக இந்திய வம்சாவளியினரின் வாக்கு குடியரசு கட்சி பக்கம் திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு இந்தியா – அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான நட்பு நெருக்கமானதே காரணம் என சொல்லப்படுகிறது.

அமெரிக்கா செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetusa

Twitter : https://twitter.com/tamilmicsetusa