அமெரிக்காவில் வறுமையில் வாடும் இந்தியர்கள்! ஆய்வில் அதிர்ச்சி தகவல்

NRI

அமெரிக்காவில் வசிக்கும் 6.5 சதவீத இந்தியர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் சுமார் 42 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கின்றனர். பொதுவாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்பவர்கள் அங்கு செல்வ செழிப்போடு மகிழ்ச்சியாக இருப்பதாக இந்தியாவில் வசிக்கும் பலர் நினைத்துகொண்டிருப்பர்.

ஆனால் அவர்களில் சிலர் எதிர்ப்பார்த்த வாழ்க்கையை விட மிகவும் சிரமமான வாழ்க்கையையே அங்கு வாழ்ந்துகொண்டிருப்பர். இதனை உண்மாக்கியுள்ளது ஓர் ஆய்வு.

us indian

ஜான்ஸ் ஹாப்கின்ஸின் பால் நிட்ஜ் ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ்டு இன்டர்நேஷனல் ஸ்டடீஸின், தேவேஷ் கபூர் மற்றும் ஜஷான் பஜ்வாட் ஆகியோரால் நடத்தப்பட்ட இந்திய அமெரிக்க மக்கள்தொகையில் வறுமை பற்றிய ஆய்வின் முடிவுகள் அண்மையில் வெளியாகின.

அதன்படி, அமெரிக்காவில் வசிக்கும் 6.5 சதவீதம் இந்தியர்கள் வறுமையில் வாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

இதில் வங்காளிகள் மற்றும் பஞ்சாபியர்கள் அதிகம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் உழைப்புச் சக்தியில் இல்லை, ஐந்தில் ஒருவர் அமெரிக்க குடியுரிமை பெறாதவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் இந்தியர்களின் வறுமை நிலை அமெரிக்காவில் வாழும் கருப்பினத்தவர் மற்றும் ஸ்பானிய அமெரிக்கர்களை ஒப்பிடும்போது பரவாயில்லை என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கெல்லாம் கவலையே இல்லை அவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்கள் என இனி இந்தியர்கள் கனவு காண வேண்டாம்.

அதற்காக கல்விக்காகவும், வேலைக்காகவும் அமெரிக்காவுக்கு செல்லாமலும் இருக்க வேண்டாம்.

இருப்பினும் இந்தியாவில் ஏழையாக இருப்பதை விட அமெரிக்காவில் ஏழையாக இருப்பது ஒரு கெளரவம் தான் என்கின்றனர் பல இந்திய வம்சாவளிகள்.

இதையும் படிக்கலாமே:  அதிபர் ட்ரம்ப் மருத்துவமனையில் அனுமதி!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter