சவால்களை சமாளிப்போம்- கமலா ஹாரிஸ்

Kamala harris

உள்நாட்டில் எழுந்துள்ள சவால்களை முனைப்புடன் சமாளிப்போம் என அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

அதன் மூலம் இந்திய வம்சாவளி மற்றும் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனால், அமெரிக்க வாழ் தமிழர்கள் மட்டுமின்றி கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமான துளசேந்திரபுரம் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

joe biden kamala harris

இந்நிலையில் வில்மிங்டன் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய கமலா ஹாரிஸ், “அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்குள் நுழையும்போது, இதுவரை காணாத பல்வேறு சவால்களையும் பிரச்னைகளையும் எதிர்கொள்ள நேரிடும் என்பது எனக்கும் ஜோ பைடனுக்கும் நன்றாக தெரியும்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது முதல், பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லவேண்டும்.

அமெரிக்காவை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும். அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பலமான அமெரிக்காவை உருவாக்கி உலகிற்கே தலைமை ஏற்கும் அளவிற்கு முன்னெடுத்து செல்ல வேண்டும்.

அதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம். மீண்டும் ஒன்று கூடி, அமெரிக்காவின் கூட்டணியை புதுப்பித்து, தேச பாதுகாப்பை பலப்படுத்துவோம். பருவநிலை மாற்ற சவாலை எதிர்கொள்வோம்.

அமெரிக்க மக்களுக்கு எது நல்லதோ அதனை செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய ஒரே இலக்கு.

மக்களுக்கு நல்லதை பைடன் தலைமையிலான அரசு செய்து காட்டும். அமெரிக்காவின் கூட்டணியை புதுப்பித்து தேச பாதுகாப்பை வலுப்படுத்துவோம்” எனக் கூறினார்.

இதையும் படிக்கலாமே: அமெரிக்காவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 2,000 பேர் பலி!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter