முதியவர்களை கவனித்துக்கொண்டால் ரூ.15 லட்சம்: அமெரிக்க அரசு

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக குழந்தைகள், வயதான குடும்ப உறுப்பினர்களை வீட்டிலேயே இருந்து நன்றாக கவனித்துக்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பான American Rescue Plan Act of 2021 என்ற மசோதா அமெரிக்காவில் கடந்தவாரம் தாக்கலானது. அதுமட்டுமின்றி, அரசு ஊழியர்களுக்கான அவசரகால விடுப்பு நிதிக்காக ரூ.4,128 கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளி செல்லாத குழந்தைகளையும், வயது முதிர்ந்த முதியவர்களையும் கவனித்துக்கொள்ளும் மத்திய அரசின் பெற்றோர்களுக்கு செப்டம்பர் 30 வரை சம்பளத்துடன் விடுப்பு கிடைக்கும்.

A look at past US government shutdowns | World News,The Indian Express

இம்மசோதாவின் படி முழு நேர அரசு ஊழியர்கள், 600 மணி நேர விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்.

அவர்களுக்கு மணிக்கு 35 டாலர்களும், வாரத்திற்கு 1400 டாலர்கள் வரையும் சம்பளமும் வழங்கப்படும்.

இதனால் அமெரிக்காவில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா காரணமாக வீட்டிலுள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும், மாற்றுத்திறனாளிகளையும் 55 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களை கவனிக்க வேண்டிய பொறுப்பு உள்ளவர்களுக்கும் இதே சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இதே போல் சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் கிடைக்கும். முழு நேர பணியாளர்களுக்கு மட்டுமின்றி பகுதிநேரமாக பணியாற்றுபவர்களுக்கும் சில சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கர்கள் அலுவலகங்களுக்காக வெளியே வந்தால் தொற்று ஏற்படும் என்ற அச்சத்தை போக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்க அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் திளைத்தாலும், தனியார் ஊழியர்கள் வயிறு எரிச்சலுடன் சுற்றி திரிகின்றன.

புதிதாக பதவியேற்றுள்ள பைடன் அரசு, புதுப்புது திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்து அமெரிக்க மக்களை குஷிப்படுத்திவருகிறது.