கொரோனா தடுப்பூசி 15 வயது குட்பட்டவர்களுக்கு 100% பலன்

vaccine

அமெரிக்காவின் பைசர் தடுப்பூசி 15 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா வைரசிலிருந்து கடுமையான பாதிப்பை தடுப்பதில் 100% பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

Representative image. Credit: Reuters Photo

கொரோனாவை கட்டுப்படுத்த பைசர் மற்றும் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தும் பணி அமெரிக்காவில் தீவிரமாக ஒருபுறம் நடைபெற்றுவந்தாலும் கொரோனா தொற்று பரவலின் வேகம் கட்டுக்குள் வராமல் இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அமெரிக்காவின் உணவு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.

பல நாடுகளில் செலுத்தப்பட்டுவரும் பெரும்பாலான கொரோனா தடுப்பூசிகள் முதியவர்களுக்கு நல்ல பலன்களை கொடுப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக பிரிட்டனில் 80வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட பின்னரே பொதுமக்களுக்கு போடப்பட்டது.

பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியானது அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. அதற்கு குறைவானவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் சோதனை முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில் சோதனை முயற்சியாக 12 முதல் 15 வயதுடைய 2,260 சிறுவர்களுக்கு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. மாறாக 100% பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சோதனையில் கிடைத்த தகவல்களை அரசுக்கு அனுப்பி வைக்க பைசர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதனையடுத்து சிறுவர்களுக்கும் பைசர் தடுப்பூசி விரைவில் செலுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த கல்வியாண்டு தொடங்குவதற்கு முன் அமெரிக்காவில் அனைத்து சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.