மாடனா vs ஃபைசர்! எது பெஸ்ட்?

Vaccine

மாடனா கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு உலகிலேயே முதல் நாடாக அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. மாடனாவின் கொரோனா தடுப்பு மருந்தினையும் , ஃபைசரின் கொரோனா தடுப்பு மருந்தினையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

கொரோனா பாதிப்பிலும் உயிரிழப்பிலும் உலகளவில் முதல் நாடாக இருக்கிறது அமெரிக்கா. இங்கு ஏற்கனவே ஃபைசரின் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் இரண்டாவதாக மாடனாவின் கொரோனா தடுப்பு மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகமான FDA ஒப்புதல் அளித்திருக்கிறது. மாடனாவின் தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளிக்கும் முதல் நாடு அமெரிக்கா.

Comparing the Pfizer and Moderna COVID-19 vaccines - ABC News
Image credit – ABC News

ஒப்பந்தப்படி மாடனாவிடம் இருந்து முதல்கட்டமாக 20 கோடி டோஸ்களை அமெரிக்கா அரசு வாங்க இருக்கிறது. மாடனா, ஃபைசர் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுமே இரண்டு முறை உடலில் செலுத்தப்பட வேண்டும்.

ஃபைசர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் 21 நாள்கள் இடைவெளியில் செலுத்த வேண்டும்.

அதுவே மாடனாவின் தடுப்பூசியை 28 நாட்கள் இடைவெளியில் செலுத்தலாம். ஃபைசர் தடுப்பூசியை மைனஸ் 75 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும், மாடனாவை மைனஸ் 20 டிகிரி செல்சியஸிலும் பராமரிக்க வேண்டும். ஃபைசர் தடுப்பு மருந்து சோதனையில் 95 சதவிகிதமும் மாடனா 94.1 சதவிகிதமும் பலனளிப்பதாக FDA தெரிவித்துள்ளது.

ஃபைசரின் தடுப்பு மருந்துக்கு அமெரிக்கா, கனடா, பஹ்ரைன், மெக்சிகோ, சிங்கப்பூர், ஓமன், சவுதி அரேபியா, குவைத் ஆகிய நாடுகளும் மாடனாவின் தடுப்பு மருந்துக்கு அமெரிக்காவும் ஒப்புதல் அளித்துள்ளன.

இதையும் படிக்கலாமே: பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய விருது வழங்கிய ட்ரம்ப்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter