ட்ரம்ப் சீக்கிரம் குணமடையனும்- பிரதமர் மோடி

Trump- Modi

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனா தொற்றிலிருந்து‌ விரைந்து குணமடைய வேண்டுமென பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் ட்ரம்பின் பாதுகாவலர் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸின் செய்தி தொடர்பாளருக்கு தொற்று உறுதியானதை அடுத்து வெள்ளை மாளிகையில் அதிகளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வெள்ளை மாளிகை ஊழியர்களும், ட்ரம்புடன் பணியாற்றுபவர்களும் தினந்தோறும் கொரோனா பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். எனினும் சரியாக முகக்கவசம் அணிவதில்லை, உதவியாளர்களிடம் சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை மருத்துவர்கள் அறிவுரையை காது கொடுத்து கேட்பதில்லை என ட்ரம்ப் மீது அதிருப்திகள் நிலவி வந்தன. இந்த நிலையில் தான் ட்ரம்பின் உயர்மட்ட ஆலோசகர் ஹோப் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அண்மை காலமாக ட்ரம்ப்புடன் அனைத்து இடங்களுக்கும் சென்றவர் ஹோப் ஹிக்ஸ்.

Trump- Biden
Image: TOI

ஓஹியோவில் ஜோ பைடன் உடனான விவாதத்தில் பங்கேற்பதற்காக ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ட்ரம்ப் , ட்ரம்பின் குடும்பத்தினர் மற்றும் உதவியாளர்களுடன் ஹோப் ஹிக்ஸும் சென்றார்.. அப்போது அவர்கள் யாருமே முகக்கவசம் அணியவில்லை.. அதே போல விவாத நிகழ்ச்சியிலும் ஹோப் ஹிக்ஸ் ட்ரம்புடன் பங்கேற்றிருந்தார். எனவே ஜோ பைடன், ட்ரம்பின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உதவியாளர்கள் என பலருக்கு தொற்று பரவி இருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முதல்கட்டமாக ட்ரம்புக்கும் , அவரது மனைவி மெலனியாவுக்கும் வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் தனக்கும், மெலனியா ட்ரம்புக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக அதிபர் ட்ர‌ம்ப் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை அடுத்து தனது நண்பரும் அமெரிக்க அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவர் மனைவி விரைவில் குணமடையவும், நல்ல ஆரோக்கியம் பெறவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்கலாமே: ட்ரம்ப் தன்னிடம் தவறாக நடந்துகொண்டார்! மாடல் அழகி பகீர் குற்றச்சாட்டு

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter