கொரோனா பாதிப்பு: பிரதமர் மோடியுடன் உரையாடியஅதிபர் பைடன்

modi - biden

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக இன்று உரையாடினார்.

அப்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உச்சத்தில் உள்ளது.

Biden- Modi

நாட்டையே அச்சுறுத்திவரும் கொரோனாவால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பல இடங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறை, மருந்து பற்றாக்குறை மற்றும் படுக்கை பற்றாக்குறையால் செய்வதறியாது திணறுகிறது இந்தியா.

ஒரு பக்கம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவந்தாலும், மறுபுறம் தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில் இன்று இந்திய பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக பேசினார்.

அப்போது, இந்தியாவில் கொரோனா பாதிப்பு சூழல் குறித்து கேட்டறிந்ததாக தெரிகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்ய அமெரிக்க தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார்.

தடுப்பூசிகளுக்கு தேவையான மூலப்பொருட்களை சப்ளை செய்வதாகவும் விவாதித்தார். கொரோனா சவாலை இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்தால் வெல்லலாம் என்றும் பைடன் பிரதமர் மோடியிடம் தெர்வித்தார்.

முன்னதாக இந்தியாவின் கொரோனா பரவல் குறித்து ஐ.நா. உலக சுகாதார அமைப்புகவலை தெரிவித்துள்ளது.

மற்ற நாடுகளில் நோய் தொற்று உயிர்பலி கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இரண்டாவது கொரோனா அலை கவலையை ஏற்படுத்தியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாஸிஸ் தெரிவித்துள்ளார்.