10 ஆண்டுகளாக வருமானவரி கட்டாத அதிபர் ட்ரம்ப்!

trump

அமெரிக்க அதிபர் அதிபர் ட்ரம்ப் கடந்த கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்த தவறியதாக பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார்.

அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு கொரோனா விவகாரத்தை திறம்பட கையாளவில்லை, கறுப்பின மக்களுக்கு ட்ரம்ப் ஆட்சியில் பாதுகாப்பில்லை எனக் கூறி வாக்குகளை சேகரித்துவருகிறார். அதிபர் ட்ரம்பின் ஒவ்வொரு நகர்வுகளும் அவருக்கான வாக்குகளாகவே பார்க்கப்படுகிறது. இதனால் எதிர்மறை விமர்சனங்கள், அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவருக்கு எதிராகவும் ஜோ பிடனுக்கு ஆதரவாகவும் மாறக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த சூழலில் நியூயார்க் டைம்ஸ் இன்று ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அதிபர் ட்ரம்ப் தனது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பிற உரிம ஒப்பந்தங்களில் இருந்து 2018 ம் ஆண்டிற்குள் பல கோடி ரூபாய் வருமான ஈட்டியதாகவும், கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தது.

மேலும் ட்ரம்ப் அதிபராக பதவியேற்ற 2016 ஆம் ஆண்டு 55 ஆயிரம் ரூபாய் மட்டுமே வரி செலுத்தியதாகவும், தொழில் நஷ்டத்தை காரணம் காட்டி அவர் 10 ஆண்டுகளாக வருமான வரியை செலுத்தாமல் ஏமாற்றி வந்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது. அவர் தனது வருமானத்தையும் குறைத்து காட்டியுள்ளாராம். 2018 ஆம் ஆண்டில் 47.4 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாக ட்ரம்ப் கூறினார். ஆனால், அந்த ஆண்டு, அவருக்கு 4,434.9 மில்லியன் டாலர் வருமானம் கிடைத்திருப்பதை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அதிபர் ட்ரம்ப், தன்னை பற்றி நியூயார்க் டைம்ஸ் பொய்யான தகவலை பரப்பி வருவதாகவும், தன்னுடைய வருமானத்திற்கு தகுந்தவாறு தான் முறையாக வரி செலுத்திவந்துள்ளேன். அது தணிக்கைக்குட்பட்டது என்றும் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே: காட்டுத்தீயில் கருகிய திராட்சை தோட்டங்கள்! தீயை அணைக்கும் கைதிகள்..

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter