அதிபர் தேர்தல்: ட்ரம்பை விட 10% புள்ளிகள் முன்னணியில் ஜோ பிடன்!

trump vs joe biden

அமெரிக்க அதிபர் பதவிக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார்.

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார்.

கொரோனா உள்பட பல்வேறு பிரச்னைகளில் டொனால்டு ட்ரம்ப்புக்கு எதிராக மக்களின் மனநிலை மாறியிருப்பதால், தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடெனுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

2016 தேர்தலிலும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தனக்கு எதிராக இருந்ததாகவும், ஆனால் தேர்தல் முடிவுகள் அதனை பொய்யாக்கியதாகக் கூறும் ட்ரம்ப் தரப்பு, தற்போதும் அப்படியே நடக்கும் என நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது

debate

இருப்பினும் கடைசிக்கட்ட கருத்துக்கணிப்பில் டொனால்ட் ட்ரம்பை விட 10 சதவீத புள்ளிகள் முன்னிலை வகிக்கிறார் ஜோ பிடன்.

என்.பி.சி நியூஸ் மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், ட்ரம்ப்பிற்கு 42 சதவீத வாக்காளர்களின் ஆதரவும், பிடனுக்கு ஆதரவு 52 சதவீத வாக்காளர்களின் ஆதரவும் உள்ளது.

தவிர கடந்த முறை டிரம்ப் வெற்றி பெற்ற மிச்சிகன்(Michigan) மாகாணத்திலும் பைடன் முந்துகிறார்.

வெற்றிக்கு முக்கிய புள்ளியாக இருக்கும் அரிசோனா, புளோரிடா, ஜார்ஜியா, அயோவா, மைனே, மிச்சிகன், மினசோட்டா, வட கரோலினா, நியூ ஹாம்ப்ஷயர் நெவாடா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய 12 ஒருங்கிணைந்த மாநிலங்களில் பிடனே முன்னிலையில் இருக்கிறார்.

குறிப்பாக முதல்முறை வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் கருப்பினத்தவர், படித்த வெள்ளை இனத்தவர், அமெரிக்க வாழ் ஆசிரியர்கள் ஆகியோ பிடனுக்கே தங்களது ஆதரவுகளை தெரிவித்துவருகின்றனர்.

கிராம புறங்களில் மட்டும் அதிபர் ட்ரம்புக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது.

இதையும் படிக்கலாமே:  துர்காவாக மாறி ட்ரம்பை வதம் செய்யும் கமலா ஹாரிஸ்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter