மிச்சிகனில் வீட்டுப்பாடம் முடிக்காத சிறுமியை சிறையில் அடைத்த கொடுமை

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்த சிறுமி வீட்டுப்பாடம் முடிக்காததால் நன்னடத்தை விதிகளை மீறியதாக சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Protest

மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்தவர் கிரேஸ். 15 வயதான இவர், கடந்த ஆண்டு தனது தாயிடம் சண்டைப்போட்டுவிட்டு, கோபத்தில் அவரை தாக்கினார். தொடர்ந்து திருட்டு சம்பவத்திலும் ஈடுபட்டார். இதனால் கிரேஸ் மீது குற்றவியல் வழக்கு பதியப்பட்டு சிறார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், நன்னடத்தை விதிகளின் படி கடந்த மே மாதம் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். சில விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அவரை சிறார் நீதிமன்றம் விடுதலை செய்தது. சிறுமி கிரேஸுக்கான நன்னடத்தை விதிகளில் முறையாக வீட்டுப்பாடம் செய்வதும் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Protest

அதன்படி ஆன்லைன் வகுப்பில் கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடத்தை சிறுமி கிரேஸ் செய்யவில்லை எனக்கூறப்படுகிறது. அந்த சிறுமிக்கு ‘ஹைபர் ஆக்டிவிட்டி டிஸ் ஆர்டர்’ எனும் உளவியல் குறைபாடு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் வீட்டுப்பாடம் செய்யாத கிரேஸ் வழக்கை விசாரித்த ஆக்லாந்து நீதிமன்றம், அவரை சிறார் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கிரேஸ்க்கு நீதிக்கேட்டு அவரது நண்பர்கள், உறவினர்கள், உள்ளிட்டோர் பள்ளி மற்றும் நீதிமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.