நேற்று ட்ரம்பின் நண்பர்! இன்று எதிரி…. யப்பா யாருடா இவர்? இம்புட்டு திட்டம் வச்சிருக்கார்!!

கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதற்கு பின் வரவிருக்கும் அதிபர் தேர்தலில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஆதரவளிக்கக்கூடாது என கருப்பினத்தவர்களின் அமைப்புகள் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளனர். அமெரிக்காவில் 300 ஆண்டுகளாக தாங்கள் அடிமைப்பட்டு கிடந்ததாகவும் கருப்பினர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கருப்பினத்தவர்களை வேற்றுகிரக வாசிகளாக பார்க்கும் அமெரிக்க மக்கள் அவர்களை தலைவராக ஏற்றுக்கொள்வார்களா? என்பது கேள்விக்குறியே…

பிரபல அமெரிக்க ராப் பாடகர் கேன் வெஸ்ட், தனது டுவிட்டர் பக்கத்தில் ட்ரம்ப், பிடன் ஆகியோரை எதிர்த்து தானும் 2020 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வெஸ்ட் இந்த முடிவை இன்றோ நேற்றோ எடுக்கவில்லை. தன்னை ஓர் அரசியல் தலைவராக செதுக்கிக்கொள்ள முயன்ற வெஸ்ட், கடந்த 2016ம் ஆண்டு எம்டிவி விழாவில் தான் 2020ம் ஆண்டு அதிபர் தேர்தலில் பசுமை கட்சி குழுமம் சார்பில் போட்டியிடப் போவதாகத் தெரிவித்தார். பின்னர் ஜனநாயக கட்சியை தனது பாடல்கள் மூலம் எதிர்த்துவந்த வெஸ்ட், ட்ரம்புக்கு ஆதரவாகவே குரல் கொடுத்துவந்தார். ஆனால் ஜார்ஜ் புளாயிட் படுகொலை காரணமாக அமெரிக்க கருப்பின மக்கள், டிரம்ப் மீது கடும் அதிருப்தி அடைந்து ஜனநாயக கட்சிக்கு ஆதரவளிக்கின்றனர். இதனால் தனது நிலைப்பாட்டையும் மாற்றிக்கொண்டார் வெஸ்ட்.

 Kanye West

அதிபர் ட்ரம்பை விரோதியாக பார்க்க தொடங்கிய வெஸ்ட், அவரை எதிர்த்து போட்டியிட உள்ளதாக அறிவித்து கருப்பின மக்களின் ஆதரவை பெற்றுள்ளார். இவருக்கு பிரபல அமெரிக்க கார் தொழிலதிபரான எலான் மஸ்க்கும் ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால் ஜனநாயக கட்சியினரும், குடியரசு கட்சியினரும் வெஸ்ட்டை ஒரு நகைச்சுவை அரசியல்வாதியாகவே பார்க்கின்றனர். காரணம் மாபெரும் மலைப்போன்ற இரு கட்சிகளுக்கிடையே சிறு எறும்பு போட்டியிடுவது போல இருப்பதாக விமர்சித்துவருகின்றனர். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என சொல்வதுபோல அதிபர் தேர்தலில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம்.. மக்கள் திடீரென நிலைப்பாட்டை மாற்றலாம் என்பதே நிதர்சனமான உண்மை!