சுந்தர் பிச்சையிடம் குவியும் பாலியல் புகார்!

sundhar pichchai

கூகுள் நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணாத்தில் உள்ள மவுண்டைன் வியூவில் உள்ளது.

அங்கு பணியாற்றிய எமி நெய்ட்ஃபீல்ட் என்பவர், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து பல முறை நிர்வாகத்திடம் புகார் அளித்தும், அதற்கு நடவடிக்கை இல்லை மாறாக தன்னை அலட்சியப்படுத்தினர் என நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டியளித்திருந்தார்.

அதுமட்டுமின்றி விருப்பப்பட்டால் வீட்டிலிருந்து பணியாற்ற கூகுள் நிர்வாகம் அந்த பெண்ணை வற்புறுத்தியதாகவும், இதனால் வேலையை விட்டே நின்று விட்டதாகவும், எமி குற்றஞ்சாட்டியிருந்தார்.

கூகுள் நிறுவனத்தில் பல ஊழியர்கள் இனவெறி மற்றும் பாலியல் தொல்லை கொடுப்பதாக தொடர் குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இதற்காகவே சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியிலிருந்து நின்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் 500க்கும் மேற்பட்ட பெண்கள் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அதில், பணியிடத்தில் பெண்களை பாலியல் துன்புறுத்துபவர்களிடமிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும், குற்றஞ்செய்பவர்களை பாதுகாப்பதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும் கூகுள்கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் அந்த கடிதத்தில் எமியின் பிரச்னையை சுட்டிக்காட்டியதுடன், கூகுள் நிறுவனத்தின் மீதுள்ள குற்றச்சாட்டுக்களையும் பதிவு செய்திருந்தனர்.

இதனையடுத்து, ஊழியர்களின் புகார்கள் குறித்து புலனாய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புகார் அளிப்போருக்கு புதிய பாதுகாப்பு திட்டங்களை வழங்குவோம் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.