இந்திய பெண்ணை கௌரவித்த அமெரிக்கா!

Anjali Bhardwaj

இந்தியாவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ் உள்ளிட்ட 12 பேருக்கு விருது வழங்கி அமெரிக்க அரசு கவுரவித்துள்ளது.

கடந்த மாதம் 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக ஜோ பைடன், பொறுப்பேற்றார். இவரது தலைமையிலான நிர்வாகம் சர்வதேச ஊழல் தடுப்பு சாம்பியன் விருது என்ற பெயரில் ஒரு விருதை புதிதாக அறிமுகப்படுத்தியது.

இந்த விருதுக்காக இந்தியாவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ் உள்ளிட்ட 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அஞ்சலி பரத்வாஜ், தகவல் அறியும் உரிமை இயக்கத்தில் தேசிய பிரச்சாரக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் டோனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

RTI activist Anjali Bhardwaj gets US anti-corruption award

மேலும் டெல்லியில் சதார்க் நகரிக் சங் காதன் என்ற என்ற அமைப்பையும் உருவாக்கி அதனை சிறப்புடன் இயக்கிவருகிறார் அஞ்சலி. ஊழலை அம்பலப்படுத்துவதே இக்குழுவின் நோக்கம்.

இந்த குழு, ஊழல் தடுப்பு ஆயம் மற்றும் ஊழலை அம்பலப்படுத்துவோருக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டம் கொண்டு வர வெற்றிகரமாக வாதிட்ட குழு ஆகும்.

இந்த விருதுக்கு தேர்வாகியுள்ள அஞ்சலி, இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவிக்கையில், “நாடு முழுவதும் உள்ள மக்களுக்கும் அவர்களுடைய குழுக்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரமே இது” என பதிவிட்டுள்ளார்.