அமெரிக்க அதிபர் தேர்தலை சீர்குலைக்க முயற்சி!

hackers

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், ட்ரம்பும், ஜோ பிடனும் போட்டிப்போட்டு கொண்டு வாக்குகளை சேகரித்துவருகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளி வாக்காளர்களின் ஓட்டு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்ட நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனா, ரஷியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் செல்வாக்கு செலுத்த விரும்புவதாக அமெரிக்க உயர் உளவுத்துறை தலைவர் வில்லியம் இவானினா எச்சரித்திருந்தார்.

US presidential elections

இந்நிலையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் குழுக்களை ரஷ்யா, சீனா மற்றும் ஈரானுடன் தொடர்புடைய ஹேக்கர்கள் உளவு பார்த்துவருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிபர் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் ஆகிய இருவரின் பரப்புரைகளும் ஹேக்கர்களின் கண்காணிப்பில் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலின்போது ஜனநாயக கட்சியின் பரப்புரையை குறிவைத்து சீர்குலைத்ததை போன்று தற்போது ரஷ்ய ஹேக்கர்கள் செயல்படுவதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்ட்ரோண்டியம் என்ற குழுவை சேர்ந்த ரஷ்ய ஹேக்கர்கள் தேர்தல் பரப்புரையுடன் தொடர்புடைய 200க்கும் மேற்பட்ட அமைப்புகளை உளவுப்பார்த்து வருவதாக கூறியுள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம், இந்த குழு ரஷ்ய புலனாய்வு துறையுடன் தொடர்புடையது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதையும் படிக்கலாமே: காட்டுத்தீயால் கறுகும் கலிபோர்னியா; 27 பேர் பலி

FB Page

– https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
– https://twitter.com/tamilmicsetusa