பைடனுக்காக ரஷ்யாவிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்கர்கள்!

Russia Ambassador

கடந்த நவம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிப்பெற்றார். 306 தேர்வாளர்கள் வாக்குகளை பைடன் பெற்றிருந்தார்.

அவரது வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டத்தில் நடைபெறவிருந்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ட்ரம்ப் ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் ஒடுக்க முயற்சித்தால் மோதல் மூண்டது.

மிகப்பெரும் பிரச்னைகளையெல்லாம் கடந்து அதிபராக பைடன் பதவியேற்றார்.

இந்நிலையில் பைடன் மீது தவறான மற்றும் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை ட்ரம்ப் ஆதரவாளர்கள் மூலம் பரப்ப ரஷ்ய அதிபர் புதினும், அவரது நிர்வாகமும் முயற்சித்ததாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்தது.

putin biden

இதனையடுத்து ஏபிசி நியூஸ் தொலைக்காட்சிக்கு அதிபர் பைடன் அளித்த பேட்டியில், ரஷ்ய அதிபர் புதின் ஒரு கொலையாளி என கடுமையாக விமர்சித்திருந்தார்.

ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான இந்த விரிசல் உலகளவில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், பைடன் ரஷ்யாவிடம் மன்னிப்பு கேட்கவேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் அனடோலி அண்டோனோவ் ஏராளமான அமெரிக்கர்கள் வாஷிங்க்டனிலிருந்து ரஷ்யாவுக்கு மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் ரஷ்யா குறித்து வந்த அவதூறான கருத்து இரு நாடுகளின் நட்புறவை சீர்குலைக்க நேரிடம் என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கடிததற்காக அமெரிக்கர்களுக்கு நன்றியை தெரிவிப்பதாகவும், அமெரிக்க- ரஷ்யா இடையிலான நட்புறவை வளர்க்க அமெரிக்கர்களின் இந்த அக்கறையான முயற்சி நெகிழ்ச்சியளிப்பதாகவும் அனடோலி தெரிவித்தார்.