டகோட்டாவில் சத்குரு! அமெரிக்க பூர்வகுடி மக்களின் வாழ்வை கண்டறியும் முயற்சி

sadhguru

அமெரிக்க பூர்வகுடி மக்களின் கலாச்சாரம், வரலாறு மற்றும் வாழ்வியல் முறைகளை அறிந்துகொள்வதற்காக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு 15 மாகாணங்களுக்கு மோட்டார் சைக்கிளில் செப்.15 ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கினார். ‘Of Motorcycles and a Mystic’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பயணத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

டென்னஸி மாகாணத்தில் உள்ள ஈஷா அறிவியல் மையத்தில் இருந்து புறப்பட்ட, அவர், லேண்ட்ஸ், கொமான்ச்சி, மிஸிஸிபி, இல்லினாய்ஸ், மிசவ்ரி, நியூ மெக்ஸிகோ, கொலோரடோ உள்ளிட்ட மாகாணங்களுக்கு பயணிக்கவுள்ளார். அமெரிக்க பூர்வ இனக்குழுக்களின் உள்ளுணர்வுகளை பற்றியும், தனித்துவமான கலாசாரத்தையும் அறிந்துகொள்ளவே இந்த பயணம்

Sadhguru
Image: Facebook

இந்நிலையில் சத்குரு தற்போது எங்கு இருக்கிறார் என்ற அப்டேட்டையும், புகைப்படங்களையும் அவரே அவரது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். சத்குரு தெற்கு டகோட்டாவில் இருக்கும் சியோக்ஸ் (Sioux) என்ற நீர்வீழ்ச்சிக்கு வருகை புரிந்தார்.

பண்டைய அமெரிக்க பூர்வகுடிகளில் வேட்டைக்காரர்களாக விளங்கி எருமை மந்தைகளைப் பின் தொடர்ந்த லகோட்டா மற்றும் டகோட்டா நாட்டினரின் தங்குமிடமாக இந்த இடம் முன்பு இருந்தது. அமெரிக்காவின் தேசிய பாலூட்டி விலங்கான எருமையை பல பழங்குடியின மக்களும் புனிதமானதாக போற்றுகின்றனர்.

சத்குரு ஒரு மாத காலத்திற்கு இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. அமெரிக்காவில் 45 லட்சம் பேர் அமெரிக்க மற்றும் அலாஸ்கா பூர்வகுடியின மக்களாக உள்ளனர். இது அந்நாட்டின் மக்கள் தொகையில் 1.5 சதவீதம் ஆகும்.‘Sadhguru App’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து சத்குருவின் பயணம் குறித்து அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: இந்தியா மட்டும் உண்மையான கொரோனா உயிரிழப்புகளை வெளியிடுகிறதா? ட்ரம்ப் பகீர் குற்றச்சாட்டு

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter