கடலில் மூழ்கிய அகதிகள் படகு- 4பேர் பலி

boat

அமெரிக்காவில் பாறை மீது படகு மோதி விபத்துக்குள்ளானதில் அதில், பயணம் செய்த 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில், உரிய ஆவணங்கள் இல்லாததால் பெற்றோர் மற்றும் குழந்தைகள் பிரிந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகள் குறித்து ஆராய்ந்து, மனிதநேய அடிப்படையில் அவர்களை அனுமதிப்பதற்கு பரிசீலிக்கவும், அதிபர் பைடன் புதிய திட்டம் ஒன்றை பரிசீலித்துவருகிறார்.

San Diego boat wreck kills 3, shows risks of ocean smuggling - Times of  India

இந்நிலையில் ஆள்கடத்தல் கும்பல் ஒன்று அகதிகளை படகில் ஏற்றிக்கொண்டு மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்தது.

அந்த படகு சாண்டியாகோ நகருக்கு அருகே வந்தபோது பாறையின்மோது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுக்கு நூறாக நொறுங்கியது.

அதில் பயணித்த அனைவரும் நீரில்மூழ்கி தத்தளித்தனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த மீட்புப்படையினர் கடலில் தத்தளித்து கொண்டிருந்தவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை மீட்கும்பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

அதன்படி, நீரில் தத்தளித்த 25 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆள்கடத்தலில் ஈடுபட்டதாக படகின் கேப்டன் கைது செய்யப்பட்டார்.