கொரோனா எதிரொலி: அமெரிக்காவில் மீண்டும் ஊரடங்கு?

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் மீண்டும் முழுமையான ஊரடங்கை அமல்படுத்தவேண்டும் என வல்லுனர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்தே மீள முடியாமல் உலக நாடுகள் தவித்துவருகின்றன. கொரோனா வைரசால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 43லட்சத்து 71ஆயிரத்தும் மேற்பட்டோற் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு லட்சத்து 49 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறிவருகிறது.

america lockdownஅமெரிக்காவில் நாள்தொறும் சுமார் 70 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறக்கின்றனர். பொருளாதாரத்தை மீட்பதற்காக விரைவாக கட்டுப்பாடுகளை தளர்த்தியதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர முழுமையான ஊரடங்கை அமல்படுத்த வேண்டுமென வல்லுனர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஆனால் இதனால் மேலும் பொருளாதாரம் பாதிக்கப்படும் என அரசு எண்ணுவதால் ஊரடங்கை அமல்படுத்த தயங்குவதாக சொல்லப்படுகிறது. எதிர்வரும் அதிபர் தேர்தலும் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

150 க்கும் மேற்பட்ட அமெரிக்க மருத்துவ வல்லுநர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் பல அரசியல் தலைவர்கள் ஊரடங்கை அமல்படுத்தி கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையேல் நவம்பர் 1 ஆம் தேதிக்குள் அமெரிக்காவில்2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் உயிரிழப்பர் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்கா செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…
Facebook : https://www.facebook.com/tamilmicsetusa
Twitter : https://twitter.com/tamilmicsetusa