தம்பிக்கு குழந்தை பெற்றுக்கொடுத்த அக்கா!

gay

ஓரினச்சேர்க்கையாளர்களான ஆண்டனி டீகனும் ரே வில்லியம்ஸும் சகோதரியின் உதவியுடன் குழந்தை பிறந்துள்ளது.

அமெரிக்காவின் மான்செஸ்டர் நகரில் 42 வயதான டிரேசி ஹல்ஸ் என்பவரும் அந்தோணி டீகன்(38) என்பவரும் ஓரின சேர்க்கையாளராக திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தனர்.

என்னதான் திருமணம் செய்துகொண்டு தங்கள் விருப்பப்படியே சந்தோசமாக இருந்தாலும் அவர்களால் குழந்தை பெற்றெடுக்க வாய்ப்பில்லை.

இருப்பினும் அவர்களுக்கு குழந்தை பெற்றெடுக்க வேண்டுமென ஆசை ஏற்பட்டது.

குழந்தைக்கு பெற்றோராய் இருந்து எல்லாவற்றையும் செய்யவேண்டும் என்றும் ஒருவரும் ஆசைப்பட்டனர்.

Gay

இதனை அறிந்து கொண்ட அந்தோணி டீகன் என்பவரின் சகோதரி டிரேஸி ஹல்ஸ், அவர்களுக்கு குழந்தை பெற்றுக்கொடுக்க முன்வந்தார்.

இதனையடுத்து ஆண்டனி டீகன் மற்றும் ரே வில்லியம்ஸ் இருவரிடமிருந்தும் விந்துக்கள் சேகரிக்கப்பட்டு, செயற்கை கரு ஊட்டல் முறையில் கரு உண்டாக்கப்பட்டது.

அந்த குழந்தையை டிரேஸி பெற்றெடுத்து அவர்களிடம் கொடுத்தார். ஏற்கனவே டிரேஸிக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது தனது சகோதரருக்காக ஏழாவது குழந்தையை பெற்றெடுத்தார். அக்குழந்தை பிறந்ததும், ஆண்டனி டீகனும் ரே வில்லீயம்ஸும் பெற்றோராக அந்த குழந்தையை சந்தோசமாக வளர்த்து வருகின்றனர்.